'ராப்' பாடலுக்கு நடனமாடிய சந்தானம்
காமெடி நடிகர் சந்தானம் தற்போது தமிழ் சினிமாவில் பிரிக்கமுடியாத காமெடியனாகிவிட்டார். இவர் நடிகராக மட்டுமின்றி சமீபத்தில் பாடகராகவும் அவதாரம் எடுத்தார்.
ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
தற்போது, 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
இப்படத்திற்காக டான்ஸ் கற்று வருகிறார் சந்தானம்.
இந்நிலையில், வி.டி.வி. கணேஷ் தயாரித்து, நடிக்கும் 'இங்க என்ன சொல்லுது' என்ற படத்திலும் சந்தானம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் 'அப்பாட்டக்கர்' என தொடங்கும் ராப் பாடலுக்கு இவர் கடும் சிரத்தையுடன் டான்ஸ் ஆடி கலக்கியிருக்கிறாராம்.
இதுகுறித்து வி.டி.வி. கணேஷ் கூறும்போது, 'இங்க என்ன சொல்லுது' படத்தில் 'அப்பாடக்கர்' என்ற பாடலுக்கு சந்தானம் ஆடியுள்ளார். இந்த பாடல் ராப் வகையை சார்ந்தது.
தரண் இசையில் அமைந்துள்ள இந்த பாடலை மலேசியா ராப் பாடகர் ராபிட் மேக் பாடியுள்ளார். ராபர்ட் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.
இதில் சந்தானம் சிறப்பாக நடனமாடியுள்ளார். அவருடைய நடனத்தைக் கண்டு அனைவரும் வியந்து போனோம்.
நான்கு நாட்கள் படமாக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த பாடலை இரண்டே நாட்களில் படமாக்கியுள்ளோம்.
இப்பாடலில் வரும் கம்யூட்டர் கிராபிக்ஸுக்காக மட்டும் ரூ.60 லட்சம் செலவு செய்துள்ளோம்.
shared via
No comments:
Post a Comment