மீண்டும் துள்ளுவதோ இளமை ஷெரீன்
என் படத்தை நானே பார்க்கமாட்டேன் என்று கூறியுள்ளார் ஷெரீன். துள்ளுவதோ இளமை, விசில் போன்ற படங்களில் நடித்தவர் ஷெரீன்.
இதனைத் தொடர்ந்து புதிய படங்கள் இல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்தவருக்கு அத்திபூத்தார்போல் பேய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது.
இதுகுறித்து ஷெரீன் கூறுகையில், நல்ல வாய்ப்புகள் வராததால் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன். இந்த சமயத்தில்தான் சந்தோஷ்.கே இயக்கும் பேய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
இதுபோன்ற படத்தில் நான் நடிப்பது இதுதான் முதல் முறை. விசில் படம் த்ரில்லர் படமாக இருந்தாலும் அந்த படத்துக்கும், இந்த படத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
இதில் அசோக் ஹீரோவாக நடிக்கிறார். இருவரும் நடித்த திகில் காட்சிகள் கூர்க்கில் படமாக்கப்பட்டது. ஒவ்வொரு காட்சியில் நடிக்கும்போதும் பயமாக இருந்தது.
மேலும் பேய் படம் என்றாலே எனக்கு பயம் என்பதால் பார்ப்பதில்லை. இப்போது பேய் படத்தில் நடித்தாலும் நானே என் படத்தை பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
shared via
No comments:
Post a Comment