மீண்டும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் விஜய்
நடிகர் விஜய் நடிக்கும் தெலுங்கு ரீமேக் ஆகும் படங்கள் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் வசூலை வாரிக் குவிக்கும்.
குறிப்பாக, தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த 'ஒக்கடு' என்ற படத்தின் ரீமேக் தமிழில் விஜய் நடிப்பில் 'கில்லி' என்ற பெயரில் வெளிவந்து சக்கை போடு போட்டது.
மேலும், மகேஷ் பாபு நடித்த பல படங்களின் ரீமேக்கில் விஜய் நடித்து பல படங்கள் வெற்றியடைந்துள்ளன.
அந்த வரிசையில் மீண்டும் தெலுங்கு ரீமேக் படமொன்றில் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளார்.
அதன்படி, பவன் கல்யாண், சமந்தா ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளிவந்த 'அத்தரின்டிக்கி தாரெடி' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
இவருக்கு ஜோடியாக தெலுங்கில் நடித்த சமந்தாவே நடிக்கிறார்.
இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கிறார்.
ஆனால், இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
தெலுங்கு படங்களில் பெரும்பாலும் மகேஷ் பாபு படங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருந்து விஜய், தற்போது முதன்முறையாக பவன் கல்யாண் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.
விஜய் தற்போது புதுமுக இயக்குனர் நேசன் இயக்கும் 'ஜில்லா' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
shared via
No comments:
Post a Comment